இலங்கை

யாழில் வீடு புகுந்து கொள்ளையடித்த சிறுவர்கள் : ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மாயம்!

  • June 2, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெருடாவில் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், குறித்த இருவரும் வீட்டின் புகைக்கூட்டின் வழியாக உள்ளே நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அத்துடன் பணத்தை பார்த்தவுடன், நெடுங்கேணியில் […]

இலங்கை செய்தி

யாழ் விரிவுரையாளர் விரிவுரையாளர் கொலை சம்பவம் – வெளியான உண்மை

  • May 21, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது பொலிஸார் நீதிமன்றத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் மரண விசாரணை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. விசாரணையின் போது உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும் பொலிஸாரும் சாட்சியம் வழங்கினர். இதன்போதே சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். மேலும், தற்போது […]

இலங்கை

மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள யாழ்தேவி!

  • May 10, 2026
  • 0 Comments

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரை பயணிக்கும் ‘யாழ் தேவி’ கடுகதி ரயில் சேவை நாளை (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்த ரயிலில் நான்கு முதலாம் வகுப்பு பெட்டிகள் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆசனங்களை பயணிகள் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள முடியும். ரயில் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக அல்லது ஆசன முன்பதிவு வசதி கொண்ட ரயில் நிலையங்களுக்குச் சென்று பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் பாரிய தீ பரவல்

  • May 9, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை வேளையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிஸார் எனப் பல தரப்பினரும் இணைந்து தீ அணைப்பில் ஈடுபட்டடுள்ளனர்.

இலங்கை

வித்யா படுகொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனை உறுதி

  • May 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் சூம் தொழில்நுட்பம் ஊடாக உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட […]

இலங்கை செய்தி

தளபதியின் வெற்றியை கொண்டாடும் முகமாக யாழில் உணவு பொதிகள் 

  • May 5, 2026
  • 0 Comments

இளைய தளபதி விஜயின் அரசியல் வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்றையதினம் யாழ். காக்கைதீவு பகுதியில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்தோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், வெற்றியை கொண்டாடும் முகமாக கொடிகள் பறக்க விடப்பட்டதுடன், பதாகைகளும் கட்டப்பட்டிருந்தன. தேர்தலுக்கு முன்னரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து காக்கைதீவு பகுதியில் கொடிகள் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

யாழில் கறிவேப்பிலை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து பலி!

  • May 2, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த 64 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபர் கறிவேப்பிலை பறிப்பதற்கு சென்று மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார். இதன்போது வீதியால் சென்றவர்கள் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இச்சம்பவம் […]

இலங்கை செய்தி

யாழில் தந்தை செல்வாவின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி 

  • April 26, 2026
  • 0 Comments

தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஆயர் சு.ஜெபநேசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. முதலில் சதுக்கத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், அவரின் சமாதியிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் […]

இலங்கை

யாழில் பெண் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அர்ச்சுனா எம்.பி!

  • April 26, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிலமொன்றின் உரிமை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அர்ச்சுனா குறித்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. அந்த நிலம் தனக்குச் சொந்தமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிவரும் நிலையில், பெண்ணும் அந்த சொத்துக்கு உரிமைக்கோரியுள்ளார். அர்ச்சுனா அந்த நிலத்தை சுத்தம் செய்துக்கொண்டிருந்தபோது சம்பவ இடத்திற்கு வந்த பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதன்போது அவர் துப்பாக்கியை […]

இலங்கை

யாழில் சோகம் : விபத்தில் தந்தை, மகன் பலி

  • April 22, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். தந்தையும், மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளுடன் கனரக வாகனம் மோதி, இன்று அதிகாலை இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இவர்களின் உடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை,  இச்சம்பவம் தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.