ஐரோப்பா

அயர்லாந்தில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – பலரின் நிலை கவலைக்கிடம்

அயர்லாந்தில் நெடுஞ்சாலையில் பயணித்த கார் ஒன்று மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கில்டேர் கவுன்டியில் ( Kildare ) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் காயமடைந்த நால்வரில் குழந்தையொன்றும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். அக்குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது காரின் பெண் ஓட்டுநர் மற்றும் முன் இருக்கைப் பயணி ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் , டல்லாக்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் Tallaght University Hospital அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் பின் இருக்கையில் பயணித்த 20 வயதுடைய பெண் ஒருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்