அறிவியல் & தொழில்நுட்பம் ஐரோப்பா

அரசப் பரம்பரை பற்றி மக்களின் மதிப்பீடு என்ன? அதிகம் விரும்பப்படும் மன்னர்

மன்னர் மூன்றாம் சார்லஸ் அரியணை ஏறி நான்காவது ஆண்டு நிறைவு நெருங்கி வரும் நிலையில், அவர் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த மக்கள் ஆதரவு மதிப்பீட்டை பெற்றுள்ளார்.

இந்த வாரம் வெளியிடப்பட்ட யூகோவ் (YouGov) தரவுகளின்படி, மன்னர் சார்லஸ் சிறப்பாக செயல்படுவதாக 68 சதவீதமான பிரித்தானியர்கள் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டில் (2025) 62 சதவீதமாக காணப்பட்ட நிலையில் தற்போது 68சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

அதேபோல் இளவரசர் வில்லியம் அரச குடும்பத்தில் மிகவும் பிரபலமான உறுப்பினராகத் தொடர்ந்து இருக்கிறார்.

பிரித்தானியர்களில் 76 சதவீதம் பேர் அவரைப் பற்றி சாதகமான கருத்தைக் கொண்டுள்ளனர். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி இளவரசி கேத்தரின் 74 சதவீதத்துடன் உள்ளார்.

ராணி கமிலா அதிக கருத்து வேறுபாடுகளை உருவாக்குபவராகக் கருதப்படுகிறார்.  அவரைப் பற்றிய பொதுக் கருத்து 43 சதவீதம் நேர்மறையாகவும் 44 சதவீதம் எதிர்மறையாகவும் பிளவுபட்டுள்ளது.

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் அரச குடும்பத்தில் மிகக் குறைவாக விரும்பப்படும் உறுப்பினராக உள்ளார்; பிரித்தானியர்களில் 50 பேரில் ஒருவர் (2 சதவீதம்) மட்டுமே அவரைப் பற்றி நேர்மறையான கருத்தைக் கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்