ஐரோப்பா

போர் விவகாரம் : அமெரிக்காவை குற்றஞ்சாட்டும் ஜெலென்ஸ்கி!

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா கெய்வ் மீது தேவையற்ற அழுத்தம் கொடுப்பதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ( Volodymyr Zelensky) குற்றம் சாட்டியதை அடுத்து, வெள்ளை மாளிகை அவரை விமர்சித்துள்ளது.

ஜெனீவாவில் முத்தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, உக்ரைன் சமரசம் செய்ய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியது நியாயமற்றது’ என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் ( Karoline Leavitt), ரஷ்யர்கள், உக்ரேனியர்கள் மற்றும் அமெரிக்க வரி செலுத்துவோருக்கு மோதல் ‘மிகவும் நியாயமற்றது’ என்று தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ‘முக்கியமான அரசியல் விஷயங்களில்’ முன்னேற்றம் இல்லாதது குறித்து ஜெலென்ஸ்கி அதிருப்தி தெரிவித்த நிலையில், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஜெனீவா பேச்சுவார்த்தை திடீரென முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறிப்பிட்ட காலக்கெடு அல்லது இடம் எதுவும் நிறுவப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர இரு தரப்பினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்