பொழுதுபோக்கு

ராம் சரணுடன் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி? காரணம் கேட்டா அதிர்ந்து போவீங்க…

ஹீரோ என்கிற வட்டத்திற்குள் தன்னை சுருக்கி கொள்ளாமல், வில்லன், குணச்சித்திர வேடம் என தன்னுடைய எதார்த்தமான நடிப்பால், தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மனதை கவர்ந்து வருபவர் விஜய் சேதுபதி.

சமீபத்தில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

இந்த படம் விஜய் சேதுபதிக்கு முதல் 100 கோடி வசூலை பெற்று தந்தது. இந்த வெற்றியை தக்கவைத்து கொள்ள நினைக்கும் விஜய் சேதுபதி, தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் புச்சி பாபு, ராம் சரணை ஹீரோவாக வைத்து இயக்க உள்ள RC 16 படத்தில்… விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சித்துள்ளார். இதற்காக மிகப்பெரிய சம்பளம் கொடுக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார் விஜய் சேதுபதி.

கதை பிடித்திருந்தும் ஏன் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மறுத்தார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

புஜ்ஜி பாபு இயக்குனராக அறிமுகமான ‘உப்பென’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்த நிலையில், RC 16 படத்திலும் ராம் சரணின் தந்தை வேடத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்துள்ளது.

தமிழில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் சேதுபதி 40 வயதை நெருங்க உள்ள ஹீரோ ஒருவருக்கு அப்பா வேடத்தில் நடித்தால் அது தன்னுடைய இமேஜ்ஜை பாதிக்கும் என்கிற காரணத்தால், இப்படத்தில் நடிக்க முடியாது என தவிர்த்து விட்டாராம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்