பொழுதுபோக்கு

இறுதி படத்தில் விஜய்க்கு சம்பளம் எத்தனை கோடினு தெரியுமா? தென்னிந்தியாவிலேயே அடிச்சிக்க யாரும் இல்ல

சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ள நடிகர் விஜய், தன்னுடைய கடைசி படமான தளபதி 69-க்கு வாங்க உள்ள சம்பளம் பற்றி செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். அவர் நடிப்பில் தற்போது கோட் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

தளபதி 69 படத்தோடு சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார் விஜய். இதனால் அப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கான இயக்குனர் தேர்வில் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில், இறுதியாக இயக்குனர் ஹெச்.வினோத் தான் தளபதி 69 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தளபதி 69 படத்தில் நடிக்க நடிகர் விஜய் வாங்க உள்ள சம்பளம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி அவருக்கு இப்படத்திற்காக ரூ.250 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாம்.

இந்த தகவல் தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுமட்டும் உறுதியானால் கோலிவுட்டில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருப்பார். அவருக்கு கோட் படத்தில் நடிப்பதற்காக ரூ.200 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content