இந்தியா செய்தி தமிழ்நாடு

தவெக சட்டமன்றக்குழு தலைவராக விஜய் தெரிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றக்குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற தவெக எம்எல்ஏக்களை விஜய் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது ஆட்சியமைப்பது தொடர்பிலும் ஆலோசனை நடந்ததாகவும் தெரிகிறது.

இதையடுத்து, அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

அதேவேளை, விஜய் முதல்வராக ஆதரவு அளித்து உறுதிமொழி பத்திரத்தில் எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி