பதற்றத்துக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து செல்கிறார் அமெரிக்க துணை ஜனாதிபதி
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்த விவாதங்களை எளிதாக்குவதற்காக அமெரிக்க துணைத் ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் , மிக விரைவில் சுவிட்சர்லாந்து செல்லத் திட்டமிட்டுள்ளார்.
இந்த முக்கியமான ராஜதந்திரப் பயணம் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்று அவர் நேர்காணலொன்றின் போது தெரிவித்துள்ளார்.
தற்போதைய சர்வதேசச் சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த இந்தச் சந்திப்பு மிக அவசியமானதாகக் கருதப்படுகிறது.
எனினும், இத்தகைய பயணங்களை உறுதி செய்வதற்கு முன் பல்வேறு நெறிமுறைகளையும் பாதுகாப்பு அம்சங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது.
இந்தத் ராஜதந்திர பயணத்தின் மூலம் ஈரான் விவகாரத்தில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




