பொழுதுபோக்கு

சுந்தர் சி மிரட்டும் ‘வல்லான்’ ட்ரைலர் வெளியானது…. நீங்களும் பாருங்க….

சுந்தர் சி நடிப்பில், உருவாகியிருக்கும் ‘வல்லான்’ படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திரைப்படம் இயக்குவதில், ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் சுந்தர் சி அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, இவர் நடிப்பில் வெளியான ‘தலைநகரம் 2’  திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, விரைவில் இவர் நடித்துள்ள ‘வல்லான்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை, இயக்குனர் வி ஆர் மணி செய்யோன் இயக்கி உள்ளார். சுந்தர் சி ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், ஹெபா பட்டேல், அமித் பார்கவ். உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சுந்தர் சி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஒரு கொலைக்கான காரணத்தை பல்வேறு கோணத்தில் கண்டுபிடிக்க முயற்சி செய்வதை, விறுவிறுப்பான கதைக்களத்துடன் திரில்லர் ஜர்னரில் இயக்கியுள்ளார் இயக்குனர்.

‘வல்லான்’ படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை, டாக்டர் பி ஆர் மணிகண் ராமன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content