Consent Preferences
இந்தியா இலங்கை செய்தி

இலங்கை, இந்திய கூட்டு இராணுவ பயிற்சி நிறைவு

இந்திய- இலங்கை படைகளின் இருதரப்பு இராணுவப் பயிற்சியான ‘மித்ர சக்தி-XII’ நேற்று மாதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நிறைவடைந்தது.

இந்திய- இலங்கை படைகளின் இருதரப்பு இராணுவப் பயிற்சியான ‘மித்ர சக்தி-XII’ நேற்று மாதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நிறைவடைந்தது.

இந்தப் பயிற்சியில் இந்திய மற்றும் இலங்கை ஆயுதப் படைகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட படையினர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நவம்பர் 14 ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை நடைபெற்ற இந்தப் பயிற்சியானது, இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புத் திறனை மேம்படுத்துதல், பரஸ்பர புரிதலை வளர்த்தல் மற்றும் நீண்டகால உறவை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருந்ததாக, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் இறுதிக்கட்டமாக, நவம்பர் 25 ஆம் திகதி, ஒரு செயல்முறை விளக்க நிகழ்வு நடைபெற்றது.

இதனை இலங்கை இராணுவத்தின் துணைத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் கே. ஜே. என். எம். பி. கே. நவரத்ன, இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய துஸதரகப் பிரதிநிதிகள் நேரில் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று மாதுரு ஓயாவில் நிறைவு விழா நடைபெற்றது.

இந்தப் பிராந்தியத்தில் நடைபெறும் மிகப்பெரிய இருதரப்பு பயிற்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘மித்ர சக்தி’, முந்தைய பதிப்புகளின் வெற்றியைத் தொடர்ந்து, வெறும் கூட்டு ஆயுதப் பயிற்சி என்ற நிலையிலிருந்து, இரு நாட்டு இராணுவங்களின் பல்வேறு பிரிவுகள் பங்கேற்கும் விரிவான கூட்டுப் பயிற்சியாக மாற்றப்பட்டது.

இது இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த எடுக்கும் முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை