OPEC அமைப்பு உடைகிறதா? ட்ரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாக தகவல்
வெனிசுலா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளை ஒபெக் OPEC அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறு அமெரிக்க நிர்வாகம் ஊக்குவித்ததாக விடயத்தை நன்கறிந்தவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் வெனிசுலா அந்த அமைப்பிற்கு செலுத்த வேண்டிய வருடாந்திர உறுப்பினர் கட்டணத்தைச் செலுத்துவதையும் ட்ரம்ப் நிர்வாகம் தடுத்ததாக கூறப்படுகிறது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த செயற்பாடானது 05 நாடுகள் ஆதிகம் செலுத்தும் ஒபெக் OPEC அமைப்பை உடைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிகிறது எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலை அதிகரிப்பதற்கு ஒபெக் OPEC அமைப்பு முக்கிய காரணம் என ட்ரம்ப் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகின்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வெனிசுலா மீதான அமெரிக்காவின் அழுத்தம் குறித்து விவரித்துள்ள அதிகாரிகள், சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இதில் தலையிட்டு இந்த விவகாரத்தை மேலும் முன்னெடுக்க வேண்டாம் என்று ட்ரம்ப் நிர்வாகத்தை சமாதானப்படுத்தியதாகவும் விவகாரம் குறித்து அறிந்த இருவர் தெரிவித்துள்ளனர்.




