Consent Preferences
இந்தியா செய்தி தமிழ்நாடு

இனி அப்பாக்களுக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு

தமிழக அரசுப் பணியில் உள்ள திருமணமான ஆண் ஊழியர்களுக்கு முதன்முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்படவுள்ளதாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழக அரசுப் பணியில் உள்ள திருமணமான ஆண் ஊழியர்களுக்கு முதன்முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்படவுள்ளதாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப் பெண் ஊழியர்களுக்கு ஏற்கனவே 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆண் ஊழியர்களுக்கும் தந்தையர் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறக்கும் காலப்பகுதி தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, அக்காலத்தில் தாய்க்கு உடல் மற்றும் உளரீதியான ஆதரவை வழங்குவதுடன், குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனடிப்படையில், திருமணமான ஆண் அரசுப் பணியாளர்கள் தமது மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருந்து உதவுவதற்காக 15 நாட்கள் விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விடுப்பை குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆண் அரசுப் பணியாளர்களுக்கான இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கை குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி