Consent Preferences
இலங்கை செய்தி

பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா, மொரீஷியஸுடன் இணையும் இலங்கை

இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா மற்றும் மொரீஷியஸுடன் இணைந்து செயற்பட இலங்கை முழுமையான ஆதரவை வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா மற்றும் மொரீஷியஸுடன் இணைந்து செயற்பட இலங்கை முழுமையான ஆதரவை வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் புதுடில்லியில் இன்று (27) நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் கூட்டமைப்பின் (IORA) 25ஆவது அமைச்சர்கள் சபைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

IORA அமைப்பின் முக்கூட்டுக் கட்டமைப்பில் (Troika) அங்கம் வகிக்கும் இலங்கை, தலைமைப் பொறுப்பில் உள்ள இந்தியாவுக்கும் துணைத் தலைமைப் பொறுப்பில் உள்ள மொரீஷியஸுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கும், எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைச் செயற்பாடுகளாக மாற்றுவதற்கும் இலங்கை ஆதரவளிக்கும் எனத் தெரிவித்த விஜித ஹேரத், “எமது ஆதரவை நீங்கள் நம்பலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2023 முதல் 2025 வரை இலங்கை இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்ததையும் அவர் இதன்போது நினைவுகூர்ந்தார். அந்தக் காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் 12ஆவது பேச்சுவார்த்தைப் பங்காளராக இணைக்கப்பட்டமை, பிராந்திய அமைப்புகளுடனான உறவுகள் வலுப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட முன்னேற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், காலநிலை மாற்றம், கடல் மாசுபாடு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் மீன்வளப் பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொள்வதற்கு பிராந்திய நாடுகளின் தொடர்ச்சியான கூட்டுச் செயற்பாடுகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மீனவர்கள், துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் கரையோர சமூகங்கள் நேரடிப் பயன்களைப் பெறும் வகையில் பிராந்திய ஒத்துழைப்புத் திட்டங்கள் அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் கூட்டமைப்பில் 23 உறுப்பு நாடுகளும் 12 பேச்சுவார்த்தைப் பங்காளிகளும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை