ரஷ்யாவிடம் இருந்து டீசலை பெற்றுக்கொள்ள அமெரிக்கா ஒப்பந்தம்
எரிபொருளுக்கான விலை அதிகரித்து வருகின்ற நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள ட்ரம்ப் ஒப்பந்தம் ஒன்றை அறிவித்துள்ளார்.
1.8 மில்லியன் டன்களுக்கும் அதிகமான டீசலை பெறுவது தொடர்பில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானுடனான போரின் காரணமாக எரிபொருள் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு 3.89 டொலராக இருந்த ஒரு கேலன் டீசல் விலை தற்போது 6.51 டொலராக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்ய டீசல் இறக்குமதிக்கு அனுமதிக்கும் ஒரு தற்காலிக உரிமத்தை அமெரிக்க கருவூலத் துறை உடனடியாக வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை உக்ரைன் கடுமையாக விமர்சித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




