Consent Preferences
உலகம்

அமெரிக்காவின் 05 இலட்சம் மக்களுக்கு மின்வெட்டு

அமெரிக்காவின் கிழக்கு பகுதியை புயல் தாக்கியுள்ள நிலையில், லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி ஏற்பட்ட புயல் தற்போதுவரை பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

இதன்காரணமாக நியூ ஹாம்ப்ஷயர் முதல் வட கரோலினா வரை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், மின் கம்பங்களும் சாய்துள்ளன.

இதனால் சுமார் 05 இலட்சம் மக்களுக்கு மின்சாரணம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில சில விமானப் பயண பயணங்களிலும் இடையூறு ஏற்பட்டதுடன், 500இற்கும் மேற்பட்ட  விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக பென்சில்வேனியா மின்வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 1,22,000 மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மிசௌரியில் 72,000 பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்