இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழக சட்டசபையில் இரு துருவங்கள் ஒரே வரிசையில்!

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி வரிசையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அருகருகே அமர்ந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் 1967-ல் திமுக-வும், 1977-ல் அதிமுக-வும் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றன. அன்று முதல் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரு கட்சிகளும் மாறி மாறி ஆளுங்கட்சியாகவும், பிரதான எதிர்க்கட்சியாகவும் மட்டுமே இருந்து வந்துள்ளன.

எனினும், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசியல் சூழலில் இன்று இந்த இரு கட்சிகளும் எதிர்க்கட்சியாக, ஒரே வரிசையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக் தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதும் இதுவே முதல்முறை ஆகும்.

மேலும், ஆளுங்கட்சி இருக்கைகளில் புதிய முகங்களும், நீண்டகாலம் ஆட்சி செய்த பாரம்பரியக் கட்சிகள் இரண்டும் எதிர்க்கட்சி வரிசையிலும் அமர்ந்திருப்பது தமிழக தேர்தல் வரலாற்றின் மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!