பொழுதுபோக்கு

நடிகர் சிரஞ்சீவியுடன் இரட்டை வேடத்தில் நடிக்கும் த்ரிஷா… ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் சிரஞ்சீவியுடன் நடிகை த்ரிஷா தெலுங்குப் படமான ‘விஸ்வாம்பரா’ படத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்பு ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா இரட்டை வேடத்தில் நடிப்பதாகக் கசிந்துள்ள தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சினிமாத் துறையில் இருபது வருடங்களைக் கடந்தும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. குறிப்பாக, தமிழில் ‘96’ படத்திற்குப் பிறகு அவருக்கான கிரேஸ் இன்னும் அதிகமாகியது. ‘பொன்னியின் செல்வன்’ பட சமயத்தில் அந்த கிரேஸ் உச்சத்தைத் தொட்டது என்றே சொல்லலாம். இப்போது அஜித், கமல் என மீண்டும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.

சிரஞ்சீவியுடன் த்ரிஷா...

அத்துடன் தெலுங்கில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியுடன் ‘விஸ்வாம்பரா’ படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. பல வருடங்களுக்குப் பிறகு சிரஞ்சீவி- த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ளதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். இவருடைய இரண்டு கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், அவருடைய சினிமா கரியரில் திருப்புமுனையாக அமையும் எனவும் சொல்லப்படுகிறது.

மெகா ஸ்டாருடன் 18 ஆண்டுகள் கழித்து இணையும் த்ரிஷா.. அதிகாரபூர்வ  அறிவிப்பு..! - தமிழ் News - IndiaGlitz.com

இதற்கு முன்பு த்ரிஷா 2018-ம் ஆண்டு வெளியான ‘மோகினி’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ‘விஸ்வாம்பரா’ படம் மட்டுமல்லாது கமலுடன் ‘தக் லைஃப்’, அஜித்துடன் ‘விடாமுயற்சி’ மோகன்லால் உடன் ’ராம்’ நிவின் பாலுடன் ‘ஐடெண்டிட்டி’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் த்ரிஷா.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content