இந்தியா செய்தி

திரிணமூல் காங்கிரஸ் விவகாரம்: ஆணைக்குழுவுக்கு; உச்சநீதிமன்றம் காலக்கெடு

அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் (AITC) கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரும் இரண்டு குழுக்களுக்கிடையேயான உட்கட்சிப் பூசலை நியாயமான காலத்திற்குள் விசாரித்து தீர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Image ref 99388134. Copyright Shutterstock No reproduction without permission. See www.shutterstock.com/license for more information.

அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் (AITC) கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரும் இரண்டு குழுக்களுக்கிடையேயான உட்கட்சிப் பூசலை நியாயமான காலத்திற்குள் விசாரித்து தீர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து இறுதி முடிவு எடுக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது தொடர்பான காலக்கெடுவை அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் முடக்கிப் பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுப்பது அவசியமானது என்றும், தேர்தல் ஆணையம் தேவைப்பட்டால் தினமும் விசாரணை நடத்தலாம் என்றும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “சிவசேனா உட்கட்சிப் பூசல் வழக்கில் ஏற்பட்ட தாமதம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை நாம் பார்த்திருக்கிறோம்” என்று சுட்டிக்காட்டினர்.

மம்தா பானர்ஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இடைத்தேர்தல் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதால் இடைக்கால உத்தரவுக்குத் தடை கேட்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

தேர்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டுவிட்டதால், இதில் உடனடியாகத் தலையிட முடியாது என்று நீதிமன்றம் கூறியது

இது தொடர்பான வழக்கு விசாரணை செப்டம்பர் 28-ஆம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி