ஐ.நாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கிய நெத்தியடி
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் காஷ்மீர் மற்றும் இந்திய சிறுபான்மையினர் குறித்து பாகிஸ்தான் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய இந்தியா, அந்தப் பகுதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ‘பதிலளிக்கும் உரிமையைப்’ (Right to Reply) பயன்படுத்திப் பேசிய இந்திய ராஜதந்திரி க்ஷிதிஜ் தியாகி,
பிராந்திய ஆசைகளை வளர்ப்பதிலோ அல்லது எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதிலோ கவனம் செலுத்துவதை விடுத்து, கடனில் மூழ்கி தவிக்கும் தன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதில் இஸ்லாமாபாத் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
“ஒவ்வொரு நிகழ்ச்சி நிரலின் கீழும் பாகிஸ்தானுக்கு இதை நினைவூட்ட வேண்டிய தேவை இருப்பதாகத் தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைக்க முடியாத மற்றும் பிரிக்க முடியாத அங்கமாக இருந்தது, இருக்கிறது,
எப்போதும் இருக்கும்.
வெளிநாட்டு ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள ஜம்மு-காஷ்மீரின் ஒரே பகுதி பாகிஸ்தான் வசமுள்ள பகுதிதான்; அதை உடனடியாகக் காலி செய்யுமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்,” என்று க்ஷிதிஜ் தியாகி கூறினார்.




