அறிவியல் & தொழில்நுட்பம்

இங்கிலாந்தின் முதல் ஏஐ வழக்குறைஞர் – சாதகமாக வந்த தீர்ப்பு

இங்கிலாந்தில் முதல் முறையாக நீதிமன்ற நடவடிக்கையில் வழக்குறைஞராக ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுயதொழில் செய்யும் மனிதவள ஆலோசகரான டாமிரெஸ் கமால் டகுய்டிர், செலுத்தப்படாத £7,000 கடனுக்காக ஒரு சட்டப்பூர்வ கடிதத்தை அனுப்பவும், பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடங்கவும், கார்ஃபீல்ட் ஏஐ (Garfield AI) என்ற நிறுவனத்தை நாடினார்.

வழக்குச் செலவுகள்,  வெல்லக்கூடிய பணத்தை விட அதிகமாக இருப்பதால், நீதிமன்றத்தில் வாடிக்கையாளருக்காக வாதிட Garfield  நிறுவனம் ஒரு மனித வழக்கறிஞரை நியமித்தது.

விசாரணைக்கு முந்தைய அனைத்து சட்டப் பணிகளையும் AI மேற்கொண்டது. இதில், வழக்கறிஞர்களை நியமித்து பிரதிவாதி தாக்கல் செய்த எதிர் வழக்கை எதிர்த்து வாதிடுவதும் அடங்கும்.

அதன் பிறகு ஒரு மனித வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கை முன்வைத்து வாதாடியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொர்த் (Wandsworth) கவுண்டி நீதிமன்றத்தில் மூன்று மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

“வழக்குத் தொடரத் தகுதியற்றதாக இருந்திருக்கக்கூடிய உரிமையியல் வழக்குகளில் நீதி கிடைப்பதற்கு  இது உதவும் என வழக்கறிஞரான டொமினிக் லி  குறிப்பிட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்