ஐரோப்பா

அணுவாயுத செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் ரஷ்யா – நேட்டோ சந்தேகம்

2026-ஆம் ஆண்டில் அணு ஆயுதம் தாங்கிய செயற்கைகோள் ஒன்றை ரஷ்யா விண்வெளியில் ஏவ திட்டமிடக்கூடும் என  நேட்டோ உறுப்பு நாடுகளின் உளவுத்துறை நம்புவதாக ஜெர்மனியை தளமாகக் கொண்ட ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்புட்னிக்-எஸ் எனப் பெயரிடப்பட்ட அந்தச் செயற்கைக்கோள் பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டு, மொஸ்கோ பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் உளவுத் தகவல்கள் பகிரப்பட்டுள்ளதாக  அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  ஜெர்மனியில் உள்ள ரஷ்யத் தூதரகம், ஜெர்மனியின் எல்லைப் பாதுகாப்புப் படை (BND) மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகம் ஆகியவை எவ்வித கருத்துக்களையும்  வெளியிடவில்லை.

முன்னதாக விண்வெளியில் அணு குண்டு வெடிப்பை ஏற்படுத்தி எதிரி செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய ஒரு ஆயுதத்தை மொஸ்கோ உருவாக்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.

இருப்பினும் ரஷ்யா அந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்