Ti7 SUV கார்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்ய தடை – காரணம் என்ன?
சீன தயாரிப்பான Ti7 SUV வகை கார்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விற்பனை செய்ய டச்சுநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரித்தானிய சொகுசு வாகன உற்பத்தியாளரான ஜாகுவார் லேண்ட் ரோவருடனான (JLR) வடிவ ஒற்றுமை முரண்பாடு காரணமாகவே இந்த தடை உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
BYD Ti7, லேண்ட் ரோவர், டிஃபெண்டரைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளதுடன், ஜாகுவார் லேண்ட் ரோவரின் பதிவு செய்யப்பட்ட வடிவமைப்பு உரிமைகளை மீறியுள்ளதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
வாகனங்களின் ஒட்டுமொத்த விகிதாச்சாரங்கள், வளைந்த பக்கவாட்டுகள், சக்கர வளைவுகள் மற்றும் ஜன்னல் கோடுகளில் உள்ள ஒற்றுமைகளையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய குறித்த வாகனங்களை விற்பனை செய்ய நீதிமன்றம் இடைகால தடை விதித்துள்ளது.
நீதிமன்றத்தின் தடை உத்தரவின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் Ti7-ஐ இறக்குமதி செய்வது, தயாரிப்பது, விற்பனைக்கு வழங்குவது, விற்பனை செய்வது, சேமித்து வைப்பது அல்லது விநியோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

