சியூட்டாவில் கைவிடப்பட்ட நிலையில் தவிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள்
சியூட்டாவில் (Ceuta) கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கூறிய அப்பகுதிக்கான தலைவர் ஸ்பெயின் அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளார்.
சட்டவிரோதமாக செவுட்டாவிற்குள் நுழைந்த 72,000 குடியேறிகளில் 70,000 பேரை அண்டை நாடான மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக ஸ்பெயின் கூறுகிறது.
ஆனால், அங்கு தங்கியுள்ள சுமார் 2,500 பேரில், நூற்றுக்கணக்கான துணையற்ற சிறார்களும் அடங்குவர்.
அவர்கள் உணவு, நீர், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகள் குறைவாக உள்ள மோசமான சூழ்நிலைகளைச் சந்தித்து வருகின்றனர்.
சியூட்டாவின் தலைவர் ஜுவான் ஜீசஸ் விவாஸ் ( Juan Jesus Vivas) இன்று ஊடகங்களிடம் அளித்த பேட்டியில், கோட்பாட்டு ரீதியாக 90 பேரை மட்டுமே கையாளக்கூடிய திறனுக்கு எதிராக, அதிகாரிகள் 1,100 புலம்பெயர்ந்த சிறார்களைப் பராமரித்து வருவதாகத் தெரிவித்தார்.
“இது முற்றிலும் தாங்க முடியாத ஒரு நிலைமை என்று விவரித்த அவர், வரவேற்பு மையங்கள் திணறுவதால் “ஒழுங்குக்கும் பொதுப் பாதுகாப்புக்கும் பெரும் ஆபத்து” இருப்பதாகவும் கூறினார்.




