04 மாகாணங்களில் எலி காய்ச்சல் பரவும் அபாயம்
இலங்கையின் நான்கு மாகாணங்களில் எலிகாய்ச்சல் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மேல், தென், மத்திய, மற்றும் சப்ரகமுவ ஆகிய 4 மாகாணங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் எலிக் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட அசுத்தமான நீரின் ஊடாக எலி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் அதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அருகில் உள்ள சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார .வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊடாக இலவசமாக மருந்துகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வயிற்றுப்போக்கு மஞ்சள் காமாலை தோல் நோய்கள் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களுக்கான அறிகுறிகள் தென்னப்பட்டவுடன் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலை அல்லது அங்கீகரிக்கப்பட்ட வைத்தியரிடமிருந்து சிகிச்சைகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அசுத்தமான நீரில் குழந்தைகளை விளையாடச் செய்வது, நீராடுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறும் அவர் குறிப்பிட்டார்




