இலங்கை செய்தி

இயற்கை சீற்றம்: இலங்கையில் 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4,151 குடும்பங்களைச் சேர்ந்த 16,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

மேலும், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஒரு வீடு முழுமையாகவும், 581 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் 682 குடும்பங்களைச் சேர்ந்த 2,504 பேர் 43 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 7,288 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,288 பேரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை