நேபாளத்தில் மின் உற்பத்தி திறன் சீர்குலைவு – கைக்கொடுக்கும் இந்தியா
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம், அந்நாட்டின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தித் திறனை கடுமையாகப் பாதித்துள்ளது.
இந்நிலையில் நிவாரணம் அளிக்கும் விதமாக, டிசம்பர் 31 வரை நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மின்சாரம் வழங்க இந்திய மின்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கமைய நேபாளத்திற்கு 654 மெகாவாட் வரை மின்சாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு, டிசம்பர் மாதம் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட இந்தக் கடுமையான வெள்ளத்தால், நேபாளம் மற்றும் திபெத்தியப் பகுதியில் கிட்டத்தட்ட 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நேபாளத்தில் உள்ள 12-க்கும் மேற்பட்ட நீர்மின் நிலையங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன.
இன்னும் காணாமல் போனவர்களில் மின் நிலைய ஊழியர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




