சியூட்டா புலம்பெயர்ந்தோர் மீது கலவரத் தடுப்பு பொலிஸார் தடியடி தாக்குதல்
வட ஆப்பிரிக்காவின் சியூட்டா பகுதியில் உள்ள கடற்கரைகளில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை அப்புறப்படுத்தி, அவர்களில் சிலரை தற்காலிகக் குடியிருப்புகளுக்கு மாற்றும் நடவடிக்கையை ஸ்பெயின் கலவரத் தடுப்புப் பொலிஸார் இன்று முன்னெடுத்தனர். இதன்போது வானத்தை நோக்கி ரப்பர் குண்டுகளைச் சுட்டும், மக்கள் மீது தடியடி நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறிய பிரதேசத்தில் 10,000 புலம்பெயர்ந்தோர் இன்னும் தங்கியிருப்பதாக ஸ்பெயின் மதிப்பிடுகிறது. சியூட்டா பகுதியில் கடந்த ஜுலை மாதம் 72,000இற்கும் மேற்பட்டோர் அத்துமீறி குடியேறினர். இருப்பினும், அவர்களில் பெரும்பாலானோர் பின்னர் […]







