திருபரங்குன்றம் விவகாரம் – தமிழக அரசு மீதான அவமதிப்பு வழக்கு தொடர்பில் விசாரணை
திருபரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் கார்த்திகை தீபம் அன்று குறித்த தீபம் ஏற்படவில்லை.
இந்நிலையில் தமிழக அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நீதிபதிகளான அர்விந்தகுமார், வி.எம்.பஞ்சோலி அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




