தொடர்ந்து வலுவடைந்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன்படி மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 325.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 311.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை யூரோவுக்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 359.13 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 341.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 411.56 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 391.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.