இலங்கை

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கிய ஐ.நா!

இலங்கை பொலிஸாரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு தீர்ப்பாயத்தின் 17பேரடங்கிய   நீதியரசர் குழாம் இலங்கைக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரொருவர் சுமார் ஒருமாதகாலமாக கிரிக்கெட் துடுப்புமட்டையால் தாக்கப்பட்டமை, மின்சாரத்தாக்குதல்,  வன்புணர்வு என பொலிஸாரால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.

இது தொடர்பில் கடந்த 2014 ஆமு் ஆண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் முறைப்பாடளிக்கப்பட்டது.

குறித்த முறைப்பாட்டினை விசாரணை செய்த 17 பேர் அடங்கிய நீதியரசர் குழாம்,  சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினருக்கு ஆதரவாகவும்,  இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கியிருக்கின்றது.

இந்த விவகாரம் தொடர்பில்  இலங்கை அரசாங்கத்தைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் நீதியரசர் குழாம்,  சுதந்திரமான விசாரணைகளின் மூலம் இச்சித்திரவதைகளுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளைக் கண்டறியுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவர்களுக்கு உரியவாறான தண்டனை வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் இலங்கை அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content