பொழுதுபோக்கு

“சூப்பர் ஸ்டார்” பட்டம்… பதிலடிக்கு தயாராகும் ரஜினி

பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்து கொடி கட்டி கெத்தாக பறந்து வருகிறார் ரஜினி.

ஆனால் இந்த பட்டத்தை பறிப்பதற்கு பல நடிகர்கள் போட்டி போட்டு கமுக்கமாக வந்த நிலையில், தற்போது அப்பட்டமாகவே விஜய் மற்றும் இவருடைய ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அபகரிக்கும் வகையில் பல விஷயங்களை செய்து வருகிறார்கள். தற்போது இது பற்றியான பேச்சுக்கள் தான் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

என்னதான் ரசிகர்கள் ஆசைப்பட்டாலும் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமாறு விஜய் இதுவரை எந்த ஒரு விஷயமும் செய்யாமல் இருப்பது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

ஆனால் இந்த விஷயத்தை முதலில் கொளுத்திப் போட்டது நடிகர் சரத்குமார். அதாவது வாரிசு ஆடியோ லாஞ்சில், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று போற போக்கில் ஒரு நெருப்பை கொளுத்தி போட்டு விட்டார்.

அது தற்போது நாலா பக்கமும் கொழுந்து விட்டு எரிகிறது. இந்த பட்டம் ஒன்றும் ரஜினிக்கு அவ்வளவு எளிதாக கொடுத்ததல்ல, அவருடைய நடிப்புக்கும், ஸ்டைலுக்கும் ரசிகர்கள் கொடுக்கப்பட்ட பொக்கிஷம். அதை எளிதாக யாரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இதை தெரிந்தும் விஜய் ஏன் மௌனமாக இருக்கிறார் என்பது தெரியவில்லை.

ஆனால் இது சம்பந்தமாக ரஜினி, ஜெயிலர் பாடத்தில் வெளியான ஹுக்கும் பாடலில் சரியான பதிலடி கொடுத்திருப்பார். ஆனாலும் தற்போது நேரிலேயே பதிலடி கொடுக்க நேரம் வந்துவிட்டது. ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இம்மாதம் 28ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த விழாவில் ரஜினி பேசுவதை தான் எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கண்டிப்பாக ரஜினி ஆடியோ லாஞ்சில் பேசும் பொழுது சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து முடிவு கட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் விஜய்க்கும் அவருடைய ரசிகர்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக தெளிவாகப் பேசி முடிவு கட்டி விடுவார். இந்த நாளில் தான் ரஜினி, மொத்தமாக விஜய்க்கு ஆப்பு வைக்கப் போகிறார்.

(Visited 14 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content