இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கிய கோர விபத்து: மூவர் பலி – நால்வர் காயம்

கேகாலை மாவட்டம், வரக்காபொல பகுதியில் இன்று (07) மாலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.

கேகாலை மாவட்டம், வரக்காபொல பகுதியில் இன்று (07) மாலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இரு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்திசையில் வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை