ஐரோப்பா

புதினை காண முடியாமல் கதறிய சிறுமி ; அதிபர் மாளிகைக்கு வரவழைத்து விருந்தளித்த புதின்

ரஷ்ய அதிபர் புதினை காண முடியாமல் கதறி அழுத சிறுமியை, அதிபர் மாளிகைக்கு வரவழைத்து புதின் விருந்தளித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள தாகெஸ்தான்(Dagestan) குடியரசுக்கு அதிபர் புதின் சுற்றுப்பயணம் சென்றார்.

அப்போது அவரைக் காண 8 வயது சிறுமி ரைசாட் அகிபோவா காத்திருந்தார். கூட்டத்தில் புதினை சந்திக்க முடியாமல் போனதால் ரைசாட் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இதைக்கண்டு உடனடியாக சிறுமியை அதிபர் மாளிகையான க்ரெம்ளினுக்கு புதின் நேரில் வரவழைத்தார். விழி நிறைய ஆச்சரியமும், முமத்தில் புன்னகையுடனும் புதினைக் கண்டு ஓடிவந்து கட்டியணைத்துக் கொண்ட ரைசாட் கன்னத்தில் பாசத்துடன் முத்தம் தந்து பூங்கொத்து கொடுத்து புதின் வரவேற்றார்.

சிறுமியின் கைகளை பிடித்து தன் இருக்கைக்கு அழைத்து சென்ற புதின் சிறுமியை அதில் உட்கார வைத்தார்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்