சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளை புதிப்பிப்பதற்கான முதலாவது கூட்டம் நடைபெற்றது
ஜனாதிபதிக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின்போது எட்டப்பட்ட முடிவின்படி, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இக்குழுவிற்கு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்கார கொள்கை ரீதியான வழிகாட்டல்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் குழுவின் தலைவரும் பௌத்த சாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் […]








