செய்தி விளையாட்டு

சென்னை அணியின் தலைவிதி இன்று நிர்ணயம்!

IPL தொடரில் இன்று நடைபெறும் 66 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஆகிய அணிகள் மோதவுள்ளன.

குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

IPL சீசனில் குஜராத் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து play-off சுற்றுக்கு முன்னேறி விட்டது.

எனினும், கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்பில் குஜராத் அணி விளையாடக்கூடும்.

அதேநேரத்தில், இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால்தான் பிளே play-off சுற்று வாய்ப்பைத் தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான நிலை உள்ளது.

சிஎஸ்கே அணி இதுவரை 12 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணி, 14 புள்ளிகளுடன் ராஜஸ்தானுடன் இணைந்திருக்கும்.

மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே சிஎஸ்கே அணி பிளே play-off சுற்றுக்கு முன்னேறுமா என்பது தெரியும்.

எனவே, இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்துவார்கள்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!