ஐரோப்பா

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட இருந்த நபர் : இறுதியில் நேர்ந்த விபரீதம்!

பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட இருந்த பிரஜையொருவரின் பயண அட்டை (டிக்கெட்) இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையே கையெழுத்தாகியுள்ள வன் இன் – வன் அவுட் ஒப்பந்தத்தின் கீழ் எரித்திரியா நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவர் நாடு கடத்தப்பட இருந்தார்.

இந்நிலையில் அவர் பிரான்ஸிற்கு புறப்பட இருந்த இறுதி நேரத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டால் தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய குறிப்பிட்ட சூழ்நிலைகள் காரணமாக, பிரான்சுக்கு வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்