இந்தியா

ஆபரேஷன் தியேட்டருக்குள் வைத்து திருமண போட்டோஷூட் நடத்திய மருத்துவர்..! நிர்வாகம் எடுத்த நடவடிக்கை

வித்தியாசமாக போட்டோஷூட்டை நடத்த விரும்பிய மருத்துவர் ஒருவர், ஆபரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் நடத்திய நிலையில் குறித்த மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் அபிஷேக். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணிக்கு சேர்ந்துள்ளார்.இந்த நிலையில் அவருக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இந்நிலையில் அபிஷேக் தனது வருங்கால மனைவியுடன் திருமணத்துக்கு முந்தைய ‘போட்டோஷூட்டை’ வித்தியாசமாக எடுக்க திட்டமிட்டார்.

அதன்படி தான் பணிபுரியும் மருத்துவமனையில் போட்டோஷூட் நடத்த முடிவு செய்தார். அப்போது அறுவை சிகிச்சை பிரிவில் வைத்து நோயாளிக்கு அபிஷேக் அறுவை சிகிச்சை செய்வது போலவும், அவருக்கு மணப்பெண் உதவுவது போலவும், அறுவை சிகிச்சை முடிந்ததும் நோயாளி எழுந்து அமர்வது போலவும் போட்டோஷூட் நடத்தி உள்ளனர்.

ஆபரேஷன் தியேட்டரில் திருமண போட்டோஷூட் நடத்திய மருத்துவர்; அதிரடி நடவடிக்கை எடுத்த நிர்வாகம்! | Doctor Wedding Photoshoot Operation Theatre India

அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ள நிலையில் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போட்டோஷூட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதும் பலரும் கடுமையாக கண்டித்தனர்.

இந்த நிலையில் ஆபரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் நடத்திய மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content