Consent Preferences
இலங்கை செய்தி

இணைய வழிக் குற்றங்களை எதிர்த்து போராட ரஷ்யாவுடன் இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து

ஊழல், இணையவழிக் குற்றம் மற்றும் பிற குற்றச் செயல்களை எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் உடன்பாட்டில் இலங்கையும் ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ளன.
Russiya

ஊழல், இணையவழிக் குற்றம் மற்றும் பிற குற்றச் செயல்களை எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் உடன்பாட்டில் இலங்கையும் ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ளன.

கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது, இலங்கையின் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவும், ரஷ்ய அசட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சனும் இந்த புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

இந்தச் சந்திப்பில், இருதரப்பு சட்ட ஒத்துழைப்பு மற்றும் உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஊழல், இணையவழிக் குற்றம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களால் ஏற்படும் சவால்களையும், அவற்றை எதிர்கொள்ள நெருங்கிய ஒத்துழைப்பின் அவசியத்தையும் இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர்.

இணையவழிக் குற்றம், பணச்சலவை, பயங்கரவாதம் மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான தகவல் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிக்கான வழிமுறைகளை நிறுவுவதையும் ரசட்டமா அதிபரின் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை