நியூ ஆர்லியன்ஸில் பயணிகள் கப்பலுடன், டேங்கர் கப்பல் மோதி விபத்து
நியூ ஆர்லியன்ஸில் நங்கூரமிட்டிருந்த அமெரிக்கன் குரூஸ் லைன்ஸ் பயணிகள் கப்பலுடன் டேங்கர் கப்பல் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணிகள் கப்பலில் இருந்த பலர் நீரில் மூழ்கிய நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க்வேய்ன் முல்லின் Markwayne Mullin தனது சமூக ஊடக பக்கத்தில், காணாமல் போன பயணிகளை மீட்க எங்களிடம் உள்ள அனைத்து வளங்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
காணாமல் போன பயணிகளின் விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
நியூ ஆர்லியன்ஸ் மேயர் அலுவலகம் வெளியிட்டுள்ள குறிப்பொன்றில், “பலர் மீட்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





