ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலிய பிரதமரின் அந்தரங்க உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் காலநிலை மாற்றம், எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் ஆகியோர் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்ட உரையாடல், மைக்கில் பதிவாகி வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் காலநிலை மாற்றம், எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் ஆகியோர் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்ட உரையாடல், மைக்கில் பதிவாகி வெளியாகியுள்ளது.

துருக்கியின் அந்தலியா நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் COP31 சர்வதேச காலநிலை மாநாட்டின் இடையே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடும் வர்த்தகக் கூட்டமொன்று ஆரம்பமாவதற்கு முன்னதாக, இருவரும் தனிப்பட்ட முறையில் உரையாடிக்கொண்டிருந்தனர்.

இதன்போது, தனது கையடக்கத் தொலைபேசியை சட்டைப் பைக்குள் வைத்த பிரதமர் அல்பானீஸ், தொலைபேசியை இதயத்துக்கு அருகில் வைத்திருப்பதைத் தவிர்ப்பது நல்லது என அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வைத்திருப்பது இதயத்தின் துடிப்பில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கிறிஸ் போவன், தொலைபேசியிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாகவா இவ்வாறு கூறுகின்றீர்கள் என நகைச்சுவையாகக் கேட்டுள்ளார்.

இதற்கு பிரதமர் அல்பானீஸ், அந்தக் கருத்து முற்றிலும் அர்த்தமுள்ளதாக இருப்பதாகக் கூறிச் சிரித்துள்ளார்.

தொடர்ந்து, தொலைபேசியை கால்சட்டைப் பையில் வைத்திருப்பது குறித்தே தான் அதிகம் கவலைப்படுவதாக அமைச்சர் போவன் தெரிவித்துள்ளார்.

அதற்கு, “உங்களுடைய ஆணுறுப்பின் காரணமாகவா?” எனப் பிரதமர் அல்பானீஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் போவன், “அதுவும் முக்கியமானதுதான். சொல்லப்போனால், இதயத்தை விடவும் முக்கியமானதாக இருக்கலாம்” என நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து இருவரும் சிரித்துக்கொண்டனர்.

இந்த உரையாடல் இடம்பெற்றபோது, அங்கிருந்தவர்கள் அதனைக் கவனிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், நிகழ்வின் ஆரம்ப உரையைப் பதிவு செய்வதற்குத் தயாராக இருந்த ஊடகக் காணொளிக் கருவியின் ஒலிவாங்கியில் இந்த உரையாடல் பதிவாகியுள்ளது.

பின்னர், தயாரிப்புப் பணியின்போது இந்த உரையாடலைக் கவனித்த சனல் 7 தொலைக்காட்சி நிறுவனம் அதனை ஒளிபரப்பியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பிரதமர் அல்பானீஸின் அலுவலகப் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில், இருவரும் கூட்டங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பிரதமர் அல்பானீஸ் துருக்கிக்கான பயணத்தை முடித்துக்கொண்டு ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸுக்குப் பயணித்துள்ள நிலையில், அமைச்சர் கிறிஸ் போவன் துருக்கியில் தங்கியிருந்து காலநிலை தொடர்பான சர்வதேச பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி