உலகம்

வொஷிங்டனில் பாரிய காட்டுத்தீ – 700 கட்டிடங்கள் தீக்கிரை

  • August 4, 2026
  • 0 Comments

வொஷிங்டனின் ஸ்போகேன் நகரின் புறநகர்ப் பகுதிகளில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதன்காரணமாக குறைந்தது  700 கட்டிடங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் மூன்று பாரிய  காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஐடஹோ  (Idaho) எல்லைக்கு அருகிலுள்ள ராக்கி மலை அடிவாரத்திற்கு  மேற்கே பரவ ஆரம்பித்த காட்டுத்தீ  பின்னர் புறநகரங்களுக்கும் பரவி பாரிய தீவிபத்தாக உருவெடுத்துள்ளது. தீவிபத்தினால் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை எனத் […]

ஐரோப்பா

கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் விபத்து

  • August 2, 2026
  • 0 Comments

ஏதென்ஸுக்கு மேற்கே இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள்  ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக கிரீஸ் காட்டுத்தீயுடன் போராடி வருகின்றது. இந்நிலையில் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. தீயணைப்புத் துறையால் வாடகைக்கு எடுக்கப்பட்டு, நான்கு பணியாளர்களுடன் பயணித்த இரண்டு பெல் ஹெலிகாப்டர்கள், ப்சாதா  (Psatha) பகுதியில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நடுவானில் மோதிக்கொண்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்தது. பணியாளர்களைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டன. […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

04 ஆவது வெப்ப அலைக்கு தயாராகும் பிரித்தானியா – காட்டுத்தீ அபாயம் குறித்து எச்சரிக்கை

  • July 27, 2026
  • 0 Comments

பிரித்தானியா நான்காவது வெப்ப அலைக்கு தயாராகி வருகின்ற நிலையில் காட்டுத்தீ அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் வரும் புதன்கிழமை முதல் வெப்பநிலை வேகமாக 32-33°C-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த வெப்ப அலை குறுகிய காலமே நீடிக்கும் என்றும், வார இறுதிக்குள் வெப்பநிலை பரவலாக சராசரி நிலைக்குக் குறையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு இங்கிலாந்து அதிக வெப்பநிலையை அனுபவிக்கும் அதே வேளையில், வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் […]

ஐரோப்பா

ஸ்கொட்லாந்தின் பிரபலமான பூங்காவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ – மக்களை வெளியேற உத்தரவு

  • July 25, 2026
  • 0 Comments

ஸ்கொட்லாந்தின் கெய்ர்ன்கார்ம்ஸ் (Cairngorms) தேசியப் பூங்காவில்  காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகின்ற நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கு முன்பு ஆரம்பித்த இந்த தீ, ஹைலேண்ட் பூங்காவின் சுமார் 600 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இதனை ஸ்காட்லாந்து காவல்துறை பெரும் தீவிபத்து சம்பவமாக வகைப்படுத்தியுள்ளது. தீயை அணைக்க சுமார் 500 தீயணைப்பு வீரர்களும், ஹெலிகாப்டர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி […]

ஐரோப்பா

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் காட்டுத்தீ அபாயம் – போராடும் தீயணைப்பு வீரர்கள்

  • July 22, 2026
  • 0 Comments

ஸ்பெயின் மற்றும் பிரான்சில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் இன்றை தினம் சில பகுதிகளில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் தீவிபத்து அபாயம் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரான்சின் தென்மேற்குப் பகுதியான ஜிரோண்டேவில் (Gironde) தீயணைப்பு வாகனம் தீப்பிடித்து எரிந்ததில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்பிக்யூக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களை வலியுறுத்தினர். மேலும், பத்தில் ஒன்பது காட்டுத்தீகள், தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ, […]

ஐரோப்பா

காட்டுத்தீ அபாயம் – நீராவி ரயில்களை இரத்து செய்தது பிரித்தானியா

  • July 17, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நீண்டகாலமாக இயங்கிவந்த நீராவி ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குறித்த ரயில்கள் காட்டுத்தீயை ஏற்படுத்தும் என்ற அச்சத்தின் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி பாட்டர் ரயில் என்று அழைக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் ரயில்வேயின் ரயில் ஒன்று காட்டுத்தீயை ஏற்படுத்தியதாக நம்பப்படுகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இந்த ஆண்டு 342 காட்டுத்தீ சம்பவங்களுக்குப் பதிலளித்துள்ளன. மேலும், இங்கிலாந்தில் தீவிர வானிலை நிகழ்வுகள் புதிய […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் காட்டுத்தீ அபாயம் : 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

  • July 13, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளில் குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காட்டுத்தீ பரவ ஆரம்பித்துள்ளது. வேல்ஸின் வடக்கு பகுதியில் நேற்று காட்டுத் தீ பரவியுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் இருந்த சுமார் 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் பிரித்தானியாவில் தொடரும் வெப்பநிலை காட்டுத்தீ அபாயத்தை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான காட்டுத்தீக்கள், மனிதர்களின் ஒழுக்கமற்ற நடத்தையின் காரணமாக ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள்  மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே டெர்பிஷையரில் (Derbyshire), ஏற்பட்ட […]

ஐரோப்பா

ஸ்பெயின் – பிரபல சுற்றுலாத் தளத்தில் காட்டுத்தீ!! முகாமிடும் படையினர்!

  • June 4, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தளமான முர்சியாவின் Murcia லாஸ் காரெஸில் (Los Garres) பரவிய காட்டுத்தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக சுமார் 100 குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது இருப்பிடம் திரும்பியுள்ளனர். அத்துடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் தீயைக் கட்டுப்படுத்தும்  நடவடிக்கையில், இராணுவப் பிரிவுகள், விமானங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட நூற்றுக்கணக்கான அவசரகாலப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதேசமயம் மீளவும் தீ விபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் […]