ரஷ்யாவுக்காக உக்ரைன் ராணுவத்தில் இணைந்த ஆஸ்திரேலியர் கைது: பின்னணி என்ன?
உக்ரைன் ராணுவத்தில் இணைந்து, அந்நாட்டு ராணுவத்தின் இரகசியத் தகவல்களை ரஷ்ய உளவு முகவர்களுக்கு வழங்க முயன்றதாகக் கூறப்படும் நபரை ஆஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை (AFP) கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளது. ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியக் குடியுரிமை கொண்ட 27 வயதான விளாடிமிர் டெஸ்லோவ் (Vladimir Teslov) என்பவர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது ‘வெளிநாட்டு தலையீட்டு முயற்சி’ (Attempted foreign interference) குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டிற்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். காவல்துறையின் குற்றச்சாட்டுகள் […]













