நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”க்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாவிரதமிருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா செய்தி

டெல்லியில் பரபரப்பு: 21 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வலுக்கட்டாயமாக வைத்தியசாலையில் சேர்ப்பு

  • July 18, 2026
  • 0 Comments

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”க்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாவிரதமிருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 28 நாட்களாக தொடர் போராட்டங்கள் […]

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இன்று சனிக்கிழமை (ஜூலை 18) ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. அறிவியல் & தொழில்நுட்பம் இந்தியா செய்தி

இந்திய விண்வெளி வரலாற்றில் முக்கிய மைல்கல்

  • July 18, 2026
  • 0 Comments

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இன்று சனிக்கிழமை (ஜூலை 18) ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் முதலாவது தனியார் தயாரிப்பான ‘விக்ரம்-1’ (Vikram-1) சுற்றுப்பாதை ஏவுகலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 22 மீட்டர் உயரமும், நான்கு நிலைகளையும் (four-stage) கொண்ட இந்த ராக்கெட் வானத்தை நோக்கிச் சீறிப் பாய்ந்தபோது, அது மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைக்கு ஒரு வரலாற்றுத் தருணமாக […]

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபயசிங்க, அதற்காகப் பொருத்தமான காணிகளை உடனடியாக அடையாளப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை செய்தி

வடக்கில் புதிய கைத்தொழில் பேட்டைகள்: காணிகளை அடையாளம் காண ஏற்பாடு

  • July 18, 2026
  • 0 Comments

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபயசிங்க, அதற்காகப் பொருத்தமான காணிகளை உடனடியாக அடையாளப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்துக்குப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள பிரதி அமைச்சர் , வடக்கு மாகாண ஆளுநரை நேற்று (17.07.2026) வெள்ளிக்கிழமை இரவு ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போதே […]

ஈரானின் இராணுவ நிலைகள் மற்றும் தளவாடக் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர்ச்சியாக ஏழாவது இரவாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் சனிக்கிழமை (18) மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதனால் பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் முற்றுகை – ஈரானின் பதிலடி: நடுங்கும் வளைகுடா நாடுகள்

  • July 18, 2026
  • 0 Comments

ஈரானின் இராணுவ நிலைகள் மற்றும் தளவாடக் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர்ச்சியாக ஏழாவது இரவாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் சனிக்கிழமை (18) மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதனால் பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ளது. இருதரப்பும் கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளையும் இலக்கு வைத்துள்ளன. ஈரான் மீது தாங்கள் கடற்படை முற்றுகையை அமுல்படுத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேநேரம், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைத் தீர்மானிக்கும் […]

"தமிழர் விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பாகச் செயல்படவில்லை" என்று வட மாகாண முன்னாள் முதல்வரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

தமிழர் பிரச்சினைகளை மறந்து செயல்படுகிறத அநுர அரசு

  • July 18, 2026
  • 0 Comments

“தமிழர் விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பாகச் செயல்படவில்லை” என்று வட மாகாண முன்னாள் முதல்வரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “தற்போதைய அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் குறித்துக் குறை கூற முடியாது. அவர்களுக்கு அனுபவம் சற்றுக் குறைவாக இருப்பதால் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனினும், அவர்கள் ஊழல்களில் இருந்து ஒதுங்கியுள்ளனர்; போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அரசு நிறுவனங்களுக்கான […]

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமோபோபியா (Islamophobia) தொடர்பான சிறப்புத் தூதரின் அறிக்கை குறித்து அல்பானிஸ் அரசாங்கம் தனது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பதிலை சனிக்கிழமை (18) வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட திருத்தக் கோரிக்கையை நிராகரித்தது ஆஸ்திரேலியா அரசு

  • July 18, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமோபோபியா (Islamophobia) தொடர்பான சிறப்புத் தூதரின் அறிக்கை குறித்து அல்பானிஸ் அரசாங்கம் தனது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பதிலை சனிக்கிழமை (18) வெளியிட்டுள்ளது. இதில், நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை மாற்றி அமைப்பதற்கான கோரிக்கைகளை நிராகரித்துள்ள அரசாங்கம், அதற்குப் பதிலாக கல்வி சார்ந்த ஒரு புதிய பணிக்குழுவை அமைப்பதற்கும், காவல்துறையின் சமூகத் தொடர்புப் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும் முன்னுரிமை அளித்துள்ளது. கல்வி மற்றும் விழிப்புணர்வு, பாதுகாப்பு மற்றும் ஆதரவு, சமூக ஒற்றுமை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய துறைகளின் கீழ் […]

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு வருகை தரவுள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணியில் களமிறங்குகிறது ஐரோப்பிய தூதுக்குழு

  • July 18, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு வருகை தரவுள்ளது. இந்த மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவர் எனத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வருகை தரும் மேற்படி குழுவினர், 22 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் […]

தமது உரிமைகளுக்காகத் தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்தாலும், ஐக்கிய மக்கள் கூட்டணியுடனான அவர்களின் பயணத்தில் எவ்வித தாக்கமும் ஏற்படாது. அவர்கள் தொடர்ந்து எம்முடன் இணைந்தே பயணிப்பார்கள்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைவு: சஜித் கூட்டணிக்குள் குழப்பமா?

  • July 18, 2026
  • 0 Comments

தமது உரிமைகளுக்காகத் தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்தாலும், ஐக்கிய மக்கள் கூட்டணியுடனான அவர்களின் பயணத்தில் எவ்வித தாக்கமும் ஏற்படாது. அவர்கள் தொடர்ந்து எம்முடன் இணைந்தே பயணிப்பார்கள்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: “தமிழ் பேசும் கட்சிகள் எம்முடன் ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே செயற்பட்டு வருகின்றன. எமது தரப்புடன் அந்தக் கட்சிகளுக்கு எவ்விதப் பிரச்சினையும் கிடையாது. தமது உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை […]

FIFA உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் அடைந்த அதிர்ச்சிகரமான தோல்விகளிலிருந்து மீண்டு, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. செய்தி விளையாட்டு

3ஆம் இடம் யாருக்கு? பிரான்ஸ் – இங்கிலாந்து மோதும் ‘கௌரவப் போர்’

  • July 17, 2026
  • 0 Comments

FIFA உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் அடைந்த அதிர்ச்சிகரமான தோல்விகளிலிருந்து மீண்டு, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பிரான்ஸ் அணியின் கனவு, கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கணக்கில் அடைந்த தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. மறுபுறம், இங்கிலாந்து அணி அதற்கு அடுத்த நாள் அர்ஜென்டினாவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றத்தைத் […]

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாகத் தொடரும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 13 ஆவது வாரமாகவும் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்தனர். இலங்கை செய்தி

‘காணி மீட்பு’- 13 ஆவது வாரமாக தொடரும் அறவழிப் போராட்டம்

  • July 17, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாகத் தொடரும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 13 ஆவது வாரமாகவும் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்தனர். வலிகாமம் வடக்கு, பலாலி மற்றும் மயிலிட்டிப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்தம் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், குறித்த பகுதிகள் இன்னும் உயர் பாதுகாப்பு வலயமாகவே […]