ஐரோப்பா

வேல்ஸில் உள்ள ஸ்டீல் ஆலையில் தீ விபத்து – பிரதேசவாசிகளிடம் விசேட கோரிக்கை!

  • June 4, 2026
  • 0 Comments

வேல்ஸில் உள்ள ஸ்டீல் ஆலையொன்றில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய மற்றும் மேற்கு வேல்ஸ் தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் ஆலையில் பணிப்புரிந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தீவிபத்தால் அப்பகுதியை புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் ஆலைக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா கல்வி

வேல்ஸ் அரசியல் முடிவுகள் – கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பசுமைக் கட்சி  

  • May 9, 2026
  • 0 Comments

அடுத்த வேல்ஸ் அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படும் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக வேல்ஸ் பசுமைக் கட்சித் தலைவர் அந்தோனி ஸ்லாட்டர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பிளைட் கம்ருவின் துணைத் தலைவர், தேர்தலில் அதிக இடங்களை பெற்றிருந்தாலும் முழுமையான பெரும்பான்மையைப் பெறத் தவறிய தங்கள் கட்சி, செனட்டில் பொதுவான கொள்கைகள் கொண்ட மற்ற முற்போக்குக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து பரிசீலிக்கும் என தெரிவித்திருந்தார். இதனிடையே, சீர்திருத்தக் கட்சி வெற்றி பெறாததை வரவேற்ற அந்தோனி ஸ்லாட்டர், 96 இடங்களில் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ரயில்களில் பயணிப்போர் எதிர்கொள்ளும் பாரிய சவால்!

  • October 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்களில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்  அதிகரித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்து (England), ஸ்காட்லாந்து (Scotland) மற்றும் வேல்ஸ் (Wales ) ஆகிய பகுதிகளில் 2,661 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் 13 வயதுக்கும் குறைவான பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவின் போக்குவரத்து காவல்துறை இந்த அதிகரிப்பு கவலையளிப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் […]