அமெரிக்க ஜனாதிபதிகளின் உத்தியோகப்பூர்வ விமானம் விடைபெற்றது
அமெரிக்க ஜனாதிபதிகள் பயன்படுத்திய ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) போயிங் VC-25A விமானம் தனது சேவையை நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவை ஆற்றிய இந்த விமானம் தற்போது தனது இறுதி பயணத்தை நிறைவு செய்துள்ளதாக ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்சில் நடைபெற்ற ஜி7 (G7) உச்சி மாநாட்டிற்காக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட பயணமே இந்த விமானத்தின் இறுதிப் பறப்பாக பதிவாகியுள்ளது.



