திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் புத்த விகாரை எதுவும் கட்டப்படமாட்டாது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். இலங்கை செய்தி

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் விகாரை அமைக்க ஏற்பாடா?

  • July 21, 2026
  • 0 Comments

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் புத்த விகாரை எதுவும் கட்டப்படமாட்டாது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்படும் இடத்தில், நாளை (22) புத்த விகாரை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன. இது தொடர்பாகத் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “இவ்விடயம் […]

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39ஆவது நாளான இன்று 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 13 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • July 21, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39ஆவது நாளான இன்று 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 4 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று சிறுவர்களுடைய எலும்புக்கூடுகளாகும். இந்த நிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தம் 93 நாட்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள அகழ்வுப் பணிகளின் மூலம் இதுவரையில் 467 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 444 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.  

எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை: அரசின் நிலைப்பாடு அறிவிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கையளிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கூறியதாவது: “கல்வி மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோது, கல்வி அமைச்சை வகிக்கும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயன்றன. […]

" போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் 'இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக' இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் மீண்டும் போர் ஏற்படாது: ஐரோப்பிய தூதுக்குழுவிடம் ஆளுநர் சுட்டிக்காட்டு

  • July 21, 2026
  • 0 Comments

” போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் ‘இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக’ இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். ஆனால், இராணுவம் விடுவிப்பது அந்த மக்களின் சொந்தக் காணிகளையே தவிர இராணுவத்தினரின் காணிகளை அல்ல. இந்த அரசாங்கம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான செயன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.” என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் […]

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

யாழ். மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டம் குறித்து ஆராய்வு

  • July 21, 2026
  • 0 Comments

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் கீழ் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR), தேசிய நீர்வாழ் உயிரின […]

எல்லை தாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் செயற்பாடுகளைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை செய்தி

மோதல் வெடிப்பதற்குள் முடிவு கட்டுங்கள்: யாழ்.மீனவர்களிடமிருந்து முதல்வர் விஜய்க்கு பறந்த செய்தி

  • July 21, 2026
  • 0 Comments

எல்லை தாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் செயற்பாடுகளைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்தச் சங்கத்தின் பிரதிநிதி செபமாலை அன்ரனி செபராசா மேலும் குறிப்பிடுகையில், “சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள், குறிப்பாகப் புங்குடுதீவு கடற்பகுதிக்குள் அடாவடியாக நுழைந்த தமிழக மீனவர்கள், எமது […]

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை செய்தி

சர்வதேச விசாரணைகோரி செம்மணியில் நாளை போராட்டம்

  • July 21, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் செம்மணியில் இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 454 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நாளுக்கு நாள் இதனுடன் தொடர்புடைய உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன. எனவே, இந்தப் […]

இலங்கையில் நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) 600 ஆடம்பர குளிரூட்டப்பட்ட (Air-Conditioned Deluxe) பஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை செய்தி

இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 ஆடம்பர AC பஸ்கள் கொள்வனவு

  • July 21, 2026
  • 0 Comments

இலங்கையில் நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) 600 ஆடம்பர குளிரூட்டப்பட்ட (Air-Conditioned Deluxe) பஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் 2026 முதலீட்டுத் திட்டத்தின்கீழ், 49 முதல் 54 வரையிலான ஆசனத் திறனைக் கொண்ட 600 சாதாரண பஸ்களைக் கொள்வனவு செய்வதற்காக 14.4 பில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் இதன் மூலம் திருத்தப்பட்டுள்ளது. நீண்ட தூரப் பாதைகளில் பயன்படுத்தப்படும் பஸ்களுக்கான […]

ஈரானிய உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சர் எஸ்கந்தர் மொமேனியின் (Eskandar Momeni) இஸ்லாமாபாத் விஜயம், முக்கியமாக இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தகத்தை மையமாகக் கொண்டுள்ளடது என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

அமெரிக்க – ஈரான் போரை நிறுத்த பாகிஸ்தான் மீண்டும் மத்தியஸ்தம்?

  • July 21, 2026
  • 0 Comments

ஈரானிய உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சர் எஸ்கந்தர் மொமேனியின் (Eskandar Momeni) இஸ்லாமாபாத் விஜயம், முக்கியமாக இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தகத்தை மையமாகக் கொண்டுள்ளடது என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீர் (Syed Asim Munir) ஆகியோரையும் மொமேனி, சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்தப் பேச்சுவார்த்தைகள் இருதரப்பு உறவுகளையும் தாண்டி, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் […]

Five killed in factory fire in Homagama இலங்கை செய்தி

கொழும்பு புறநகர் பகுதி தொழிற்சாலையில் தீ விபத்து: ஐவர் பலி

  • July 21, 2026
  • 0 Comments

கொழும்பு மாவட்டம், ஹோமாகம, கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையொன்றில் இன்று (21) ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். ஹோமாகம பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தினர தீ விபத்தின்போது தொழிற்சாலைக்குள் 80 பேர்வரை இருந்துள்ளனர். தீயை அணைப்பதற்குரிய முயற்சி இடம்பெற்றுவருகின்றது. 12 தீயணைப்பு வாகனங்கள் இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை இடம்பெற்றுவருகின்றது.