ஊடகர் சிவராமின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!
கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் 21வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (28) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபியில் மட்டக்களப்பு ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவை இணைந்து இந்த நினைவஞ்சலியினை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் படுகொலை செய்யப்பட்ட […]













