உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் ஆசிய நாடுகளே பெரிதும் பாதிப்பு!

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் Penny Wong கவலை தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான நீர்வழிப்பாதை முடங்கியுள்ளதால், ஏனைய உலக நாடுகளைவிடவும் ஆசிய நாடுகள் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியை சந்திப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜப்பானிய அமைச்சருடனான சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான வர்த்தகத் தொடர்புகள் இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க உதவுகின்றது எனவும் Penny Wong கூறியுள்ளார்.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே நடைபெறுவதால், இந்தப் பிரச்சனை சர்வதேச எரிசக்தி பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த விநியோகச் சங்கிலித் தடைகளைத் தகர்க்க தொடர்ந்து இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!