செய்தி விளையாட்டு

பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறவுள்ள 40ஆவது லீக் ஆட்டத்தில் Punjab Kings , Rajasthan Royals ஆகிய அணிகள் மோதுகின்றன.

நியூ சண்டிகர் முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளை குவித்து பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

நடப்பு சீசனில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி பஞ்சாப் கிங்ஸ் மட்டுமே. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸை தோற்கடித்து இருந்தது.

அந்த ஆட்டத்தில் 265 ரன்கள் இலக்கை 7 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்று மிரளச் செய்திருந்தது பஞ்சாப் அணி.

ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் குவித்து பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

கடைசியாக அந்த அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி