இலங்கை செய்தி

ஊடகர் சிவராமின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் 21வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (28) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபியில் மட்டக்களப்பு ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவை இணைந்து இந்த நினைவஞ்சலியினை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் படுகொலை செய்யப்பட்ட சிவராம் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் ஆத்ம சாந்தி வேண்டி அக வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!